எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக முன்பள்ளிகளுக்கான பரிசு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

 


எருவில் கல்வி சமூக அபிவிருத்தி
ஒன்றியத்தின் ஊடாக வழங்கல்
சமூகசேவகர் அ.வசிகரன் அவர்களது அனுசரணையில் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக முன்பள்ளிகளுக்கான பரிசு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

சிறுவர்தினத்தினை முன்னிட்டு எருவில் வடக்கு இளைஞர் கழகத்தினால் அப்பிரதேசத்தில் உள்ள 5 முன்பள்ளிப் பாடசாலைகளில் கல்விகற்கும் 275 மாணவர்களுக்கு இடையில் நடாத்தப்படவுள்ள விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றும் மாணவர்களுக்காக இந்த பரிசுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

சுமார் 70 ஆயிரம் பெறுமதியான பரிசில் பொருட்களை வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று மாலை சமூகசேவகர் அ.வசிகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

அப்பிரதேச மாணவர்களின் நலன்கருதி இளைஞர் கழகம் வேண்டிக்கொண்டதற்கு இணங்க இவ் உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவர் சமூகசேவகர் தமிழரசுக் கட்சியின் எருவில் வட்டாரத்தின் பிரதித் தலைவர் அ.வசீகரன், ஆலோசகர் முன்னாள் திடீர் மரணவிசாரணை அதிகாரி எஸ்.பேரின்பநாயகம், ஆலோசகர் தாஸன் ஸ்ரோர் உரிமையாளர் தாசன், அமைப்பின் செயலாளர் பிரதி அதிபர் இ.ஜீவராஜ்,கோடைமேடு கிராமஅபிவிருத்திச்சங்கத்தின் தலைவரும் அமைப்பின் ஆலோசகருமான க.விஜயசுந்தரம் அமைப்பின் பொருளாளர் ஆசிரியர் புஸ்பநாதன் இளைஞர் கழகங்களின் இணைப்பாளர் சசி உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.