களுவாஞ்சிகுடியில் தீபாவளியை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்பு
களுவாஞ்சிகுடி
பிராந்திய சுகாதாரப்பணிமனையினால் பிரதேசத்தில் காலாவதியான பொருட்களைவ
விற்பனை செய்யும் வர்தகர்களுககு எதிராக சட்ட நடவடிக்கை
எடுக்கப்பட்டுவருகின்றன.
களுவாஞ்சிகுடி பிராந்திய பதில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.யேகேஸ்வரன் தலைமையிலான பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் இங்குள்ள பல சரக்கு கடைகள், உணவகங்கள், மருந்து விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் பரிசோதனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவ் விசேட உணவு பரிசோதனை நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றன. பிராந்திய சுகாதாரப் பணிமனைக்குட்பட்ட கிராமங்களான களுவாஞ்சிகுடி, களுதாவளை குருக்கள்மடம், செட்டிபாளையம், மாங்காடு, தேத்தாத்தீவு, ஓந்தாட்சிமடம், கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு, துறைநீலாவணை, மகிழுர், எருவில், குருமண்வெளி, பட்டிருப்பு ஆகிய இடங்களிலுள்ள வர்த்தக நிலையங்கள், உணவங்கள் ஆகியவற்றுக்குச் செல்லும் சுகாதாரப்பரிவினர் அங்கு பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பழுதடைந்த, காலாவதியான பொருட்களை விற்பனை செய்வோருக்க எதிராக சட்டநடவடிக்கை எடுத்துவருகின்றனர்.





