அகில இலங்கை சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாய ஆராச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் பிரதேச செயலகங்களில் சந்தித்தனர்.
இச் சந்திப்பின் ஓர் அங்கமாக நேற்றய தினம் மண்முனை மேற்கு வவுணதீவு
பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி
உத்தியோகத்தர்களுடனான சந்திப்பு
அகில இலங்கை சமுர்த்தி உத்தியோகத்தர்
மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் கித்சிரி கமகே
தலைமையில் வவுணதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது நலன்புரி நன்மைகள் சபை ஊடாக வெளியிடப்பட்ட விண்ணப்பப் படிவம் தொடர்பிலும், வங்கி ஊடாக வழங்கப்படும் முதியோர் கொடுப்பனவு, விசேட தேவையுடையோர் கொடுப்பனவு தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் நடவடிக்கை எடுக்க தேசிய சங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக இதன்போது தலைவர் கித்சிரி கமகே தெரிவித்தார்.
பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தபால் நிலையங்கள் பலவற்றில் தமது வசிப்பிடத்தின் அண்மையில் இருந்து முன்னர் வயோதிபர்கள் பணம் பெற்று வந்தனர் ஆனால் தற்போது தூர இடங்களிலிருந்து கூடிய பணம் செலவு செய்து வங்கிகளில் பணம் பெறவேண்டிய நிலை உருவாகியுள்ளது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வெளிக்களத்தில் சென்று பணம்
வழங்குவது போதிய பாதுகாப்பு இல்லை. இது அவ் உத்தியோகத்தர்களின் தொழிலில்
பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இது தொடர்பிலும் தாம் உரிய தரப்பினருடன் எழுத்துமூலம் அறிவித்து கலந்துரையாடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அகில இலங்கை சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாய ஆராச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் உப செயலாளர் உப்புல், வவுணதீவு பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர் சங்கத் தலைவர் நிமலானந்தம், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.





