அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கொதிநீர் பீப்பாய் ஒன்றில் வீழ்ந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 


அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கொதிநீர் பீப்பாய் ஒன்றில் வீழ்ந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (06.10.2022) மாலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சிறைக்கைதி சிறைச்சாலை கொதிநீர் பீப்பாய் ஒன்றில் தவறி வீழ்ந்த நிலையில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸார் மற்றும் சிறைச்சாலை திணைக்கள உத்தியோகத்தர்கள் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.