மணக்கோலத்தில் இருந்த இளம் ஜோடி கைது .

 


தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், அங்குலான பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, மணக்கோலத்தில் இருந்த இளம் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளது.

மொரட்டுவ, சௌருபுர பிரதேசத்தில் உள்ள வரவேற்பு மண்டபத்தில் வைத்து, 15 வயதான மணப்பெண்ணும் 19 வயதான மணமகனும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் காதலுக்கு சிறுமியின் பாட்டனார் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, காதலனுடன் தப்பிச் சென்ற சிறுமி, மக்கொன பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனையடுத்து, உறவினர்கள் ஒன்று கூடி திருமண வரவேற்பு மற்றும் திருமண நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்த நிலையில், பொலிஸாரால் சோதனை நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், இளைஞனை மொரட்டுவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.