கிராம அறிவு மையம் திறப்பு விழா நிகழ்வும் விவசாய அறுவடை நிகழ்வும் தன்னாமுனை சவுக்கடி கிராமத்தில் இன்று நடைபெற்றது.

 


 

மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவனம் கரித்தாஸ் நோர்ஜே நிறுவன நிதி அனுசரணையில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கரித்தாஸ் எகெட் உணவு பாதுகாப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் உலக உணவு தினத்தினை சிறப்பிக்கும் வகையில் கிராம அறிவு மையம் திறப்பு விழா நிகழ்வும் விவசாய அறுவடை நிகழ்வும் தன்னாமுனை சவுக்கடி கிராமத்தில் இன்று நடைபெற்றது

கரித்தாஸ் எகெட் நிறுவன திட்ட இணைப்பாளர் டி .சுபாகரன் ஏற்பாட்டில் நிறுவன இயக்குனர் அருட்பணி எ.ஜேசுதாசன் தலைமையில் மாவட்ட விவசாய உதவி பணிப்பாளர்
வி.பேரின்பராஜாவினால் தன்னாமுனை சவுக்கடி கிராமத்தில் நஞ்சற்ற விவசாயத்திற்கு அவசிய அறிவுரை நூல்கள் அடங்கிய அறிவு மையம் திறந்து வைக்கப்பட்டு சவுக்கடி கிராமத்தில் சின்னதம்மி இராமன் என்பவருடைய வீட்டுத்தோட்டத்தில் பயிரிடப்பட்ட மரக்கறி பயிர்கள் அறுவடை செய்யப்பட்டன

சின்னதம்மி இராமன் வீட்டுத்தோட்டத்தில் பயிரிடப்பட்ட நஞ்சற்ற பயிர்களான கத்தரி ,சுரைக்காய் .கீரை கறிமிளகாய் போன்றவை அறுவடை செய்யப்பட்டன .இந்த அறுவடை நிகழ்வில் தன்னாமுனை சவுக்கடி யாகப்பர் ஆலய பங்குத்தந்தை எ. நிக்லஸ் உட்பட கரித்தாஸ் எகெட் நிறுவன ஊழியர்கள் வீட்டுத்தோட்ட உரிமையாளரின் குடும்ப உறவினர்கள் கலந்துகொண்டனர்