மட்டக்களப்பு,பட்டிருப்பு கல்விலையத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு அறிவொளி பாலர் பாடசாலையின் சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரதேச அபிவிருத்தி வங்கியின் முழு அனுசரணையில் சிறுவர்களுக்கான விளையாட்டு விழாவானது இன்று தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலய மூன்றலில் இடம்பெற்றது.
நிகழ்விற்கு பிரதேச அபிவிருத்தி வாங்கியின் மட்டக்களப்பு மாவட்ட உதவி
மாவட்ட முகாமையாளர் சத்தியநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மற்றும்
சிறப்பு அதிதியாக கல்வாஞ்சிகுடி கிளை முகாமையாளர் முரளிதரனும் கலந்து
கொண்டனர்.
இதன்போது சிறுவர்களுக்கான பல்வேறு பட்ட விளையாட்டு நிகழ்வு இடம் பெற்றன.
இதன் போது மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும் மற்றும் வங்கிக் கணக்கு ஆரம்பிப்பதற்கான 2000 ரூபா பெறுமதியான உறுதிச் சீட்டு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





