உலக உணவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘வறுமைக்கான காரணங்களை கவனத்தில் கொள்ளலும் விவசாயிகளுக்கான உணவு பாதுகாப்பை உறுதி செய்தலும்’எனும் கருப்பொருளில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு தன்னாமுனை சவுக்கடி கிராமத்தில் நடைபெற்றது.
கரித்தாஸ் எகெட் உணவு பாதுகாப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கரித்தாஸ் நோர்ஜே நிறுவன நிதி அனுசரணையில் கரித்தாஸ் எகெட் உணவு பாதுகாப்பு திட்ட இணைப்பாளர் டி.சுபாகரன் ஏற்பாட்டில் நிறுவன இயக்குனர் அருட்பணி எ.ஜேசுதாசன் தலைமையில் தன்னாமுனை சவுக்கடி யாகப்பர் ஆலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் நஞ்சற்ற உணவு தேவைக்கான விழிப்புணர்வு சுலோகங்கள் ஏந்திய கிராம மக்களின் வாசகங்கள் காட்சிப்படுதலுடன் ஆலய வளாகத்தில் பயன்தரும் தென்னை மரங்கள் நாட்டப்பட்டு சிறுவர்களுக்கான போசாக்கு தானிய பொதிகளும்,கிராம மக்களுக்கான வீட்டுத்தோட்ட பலமரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை மட்டக்களப்பு போதனா வைத்தயசாலை வைத்தியர்
கே டி.சுந்தரேசன்
வைத்தியரினால் ‘இன்று நஞ்சற்ற உணவு நாளை நோயற்ற வாழ்வு ‘ எனும்
தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு ஆவண காட்சிப்படுத்தலுடனான கருத்துரைகளை
,கரித்தாஸ் எகெட் ஊழியர்களின் விழிப்புணர்வு நாடக காட்சிபடுத்தலும்
இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மாவட்ட விவசாய உதவி பணிப்பாளர் வி.பேரின்பராஜா ,தன்னாமுனை சவுக்கடி யாகப்பர் ஆலய பங்குத்தந்தை எ.நிக்லஸ் ,மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவன ஊழியர்கள்,கிராம மக்கள் என பலர் கலந்துகொண்டனர்





