கடலில் நீராட சென்ற மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .

 


அம்பலாங்கொடை கடலில்  நேற்று  பிற்பகல் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் குழுவொன்று அடித்துச் செல்லப்பட்டு அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவர் காணாமல் போயுள்ளதாக அம்பலாங்கொடை காவல்துறையினரை் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்மற்றும் காணாமல் போனவர் அம்பலாங்கொடை கிராமிய பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்கும் இரு மாணவர்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.