தாயுடனும் ,மகளுடனும் தவறான தொடர்பினை பேணி வந்த நபர் கைது.

 


மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் குடும்பப் பெண் ஒருவருடன் தவறான தொடர்பினை பேணி வந்த நபரொருவர்  அப்பெண்ணின் 13 வயதான மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

அந்தப் பெண்ணுடன் 41 வயதான நபரொருவர் தவறான உறவினை பேணி வந்துள்ளார். இந்நிலையில்,  அப்பெண்ணின் 13 வயதான சிறுமியையும் அவர் தொடர்ந்து பாலியல் துஸ்பிரயோகத்துக்கு  உள்ளாக்கி வந்துள்ளார் என அறியமுடிகின்றது.

இது தொடர்பில் அறிந்த, அயலவர்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து ,  சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட அந்நபரை  செய்த மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

அதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.