இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கடன் மறுசீரமைப்பு மிகவும் முக்கியமானது.

 


இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கடன் மறுசீரமைப்பு மற்றும் ஆழமான சீர்திருத்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் மீள்தன்மையை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.

உலக வங்கி வெளியிட்ட வருடத்திற்கு இருமுறை புதுப்பித்தல் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.