புளியந்தீவு புனித மரியாள் பேராலய புனித ஜோசெப் வாஸ் சபையினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.


 

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கல்வி துறையினை மேம்படுத்தும் வகையில் புளியந்தீவு புனித மரியாள் பேராலய புனித ஜோசெப் வாஸ் சபையினரால் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் சமூக பொருளாதார அபிவிருத்தி உதவியின் கீழ் மாணவர்களின் கற்றல் செயல்பாட்டுக்கான ஊக்குவிப்பு திட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் மறை மாவட்டத்தில் தற்போதைய நிலையில் பாதிக்கப்பட்டுள்ள பின்தங்கிய கிராமங்களில் மாணவர்களின் கல்வி துறையினை மேம்படுத்தும் வகையில் புளியந்தீவு புனித மரியாள் பேராலய புனித ஜோசெப் வாஸ் சபையினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு செங்கலடி மறைக்கோட்டத்தின் செங்கலடி , களுவன்கேணி,வந்தாறுமூலை ஆகிய கிராமசேவையாளர் பிரிவில் மறை ஆசிரியர்களினால் தெரிவு செய்யப்பட பாடசாலை மற்றும் மறைக்கல்வி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் பங்குத்தந்தை அருட்பணி குயின்டஸ் அடிகளாரின் தலைமையில் இன்று வழங்கி வைக்கப்பட்டன

இந்நிகழ்வில் செங்கலடி,களுவன்கேணி,வந்தாறுமூலை ஆகிய ஆலய பங்கு நிர்வாக சபை உறுப்பினர்கள்,மறை ஆசிரியர்கள்,அருட்சகோதரர்,அருட்சகோதரிகள் மற்றும் புனித ஜோசெப் வாஸ் சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.