75ஆவது சுதந்திர தின முன்னிட்டு 2000 வீடுகள் கொண்ட வீடமைப்புத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

 


தேசிய மற்றும் மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில், 75ஆவது சுதந்திர தினத்தை கௌரவமான முறையில் கொண்டாடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது தொடர்பான கலந்துரையாடல்  ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விசேட நிகழ்வைக் குறிக்கும் வகையில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 2000 வீடுகள் கொண்ட வீடமைப்புத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

75ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை, 2023ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி காலி முகத்திடலில் "ஒன்றாக எழுவோம்" எனும் தொனிப்பொருளில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.