செப்டம்பர் மாதத்திற்கான பணவீக்கம் 73.2 வீதமாக அதிகரித்துள்ளது..


 

 செப்டம்பர் மாதத்திற்கான பணவீக்கம் 73.2 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 70.2 வீதமாக பதிவாகியிருந்தது.
இதற்கிடையில், செப்டம்பர் மாதத்திற்கான உணவுப் பணவீக்கம் ஒகஸ்ட் மாதத்தில் 84.6 வீதமாக இருந்து 85.8 வீதமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.