53,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பது தொடர்பில் அமைச்சரவையில் தீர்மானம் ?

 


அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருடம் முதலாம் தவணைக்கு முன்பதாக அப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

53,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் இந்த ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படும் என்றும் அத்துடன் மாகாண மட்டத்தில் தனியான ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.