காட்டு யானை தாக்கத்தினால் சேதமடைந்த மின்கம்பத்தை புனரமைத்து தருமாறு விவசாயிகள் வேண்டுகோள்







வரதன்



 காட்டு யானை தாக்கத்திலிருந்து பொது மக்களை பாதுகாக்க அரசாங்கத்தினால் கிளீனிங் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் ஊடாக பல வேலை திட்டங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்ற பிரதேசங்களில் முன்னெடுத்து வருகின்ற போதிலும்

 பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புலுக்குன்னாக விவசாய குளத்தை அண்டிய பகுதிகளில்  காட்டு யானை தாக்கத்திலிருந்து அப்பகுதி பொதுமக்களை பாதுகாக்கின்ற மின்சார வெளிக்கு மின்சாரத்தை வழங்கி இணைக்கின்ற அதிக மின் வலு கொண்ட மின்சாரத்தூண்

 கடந்த சில நாட்களாக காட்டு யானை தாக்கத்தினால் நிலத்தில் விழுந்து கிடக்கின்ற படியினால் அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் நன்னீர் மீன்பிடி யாளர்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளனர்

 இதனால் எதிர்வரும் காலங்களில் ELNINO  தாக்கத்தினால் அதிக மழை வீழ்ச்சி கிடைக்க வாய்ப்புள்ளதால் பகுதி மக்கள் வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போது மின்சாரத் தாக்கத்திற்கு உள்ளாகின்ற சந்தர்ப்பம் ஏதுவாகும் 

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை புணரமைத்து இப்பகுதி மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு வேண்டி நிற்கின்றனர்