மட்டக்களப்பு மனிதாபிமான ஹெரிடேஜ் லயன்ஸ் கழகம் மற்றும் அபேக்க்ஷா  நன்கொடைச் சங்கம் ஆகியன இணைந்து மருத்துவப் பாடநூல்கள் மட்டக்களப்பு மாநகர சபையின் பொது நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டன.

 















 

 

 

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் விஞ்ஞான துறை சார்ந்த பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவும் வகையில், பெறுமதிமிக்க மருத்துவப் பாடநூல்கள் இன்று மட்டக்களப்பு மாநகர சபையின் பொது நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டன.

இந்நிகழ்வு மட்டக்களப்பு மனிதாபிமான ஹெரிடேஜ் லயன்ஸ் கழகம் மற்றும் அபேக்க்ஷா  நன்கொடைச் சங்கம் ஆகியன இணைந்து   ஒருங்கிணைக்கப்பட்டது.

அன்பளிப்புச் செய்யப்பட்ட மருத்துவப் பாடநூல்கள் மட்டக்களப்பு மாநகர சபையின் கௌரவ முதல்வர், கௌரவ பிரதி முதல்வர், மாநகர ஆணையாளர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோரால் உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொள்ளப்பட்டன. 

குறித்த நிகழ்வில் லயன்ஸ் கழகம் மற்றும் அபேக்க்ஷா நிறுவனம் சார்பில்

கலாநிதி. தேவகுமார் தாதிய உத்தியோகத்தர்,
எந்திரி தயாளசீலன் மயூரன், மற்றும் கலாநிதி அனிஸ்டன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.