டிக்வா புயலினால் பாதிக்கப்பட்ட விவசாய மதகுகளை துரிதமாக புணரமைக்க பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நடவடிக்கை முன்னெடுப்பு









வரதன்,



 போரதிவு பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சங்கர் புரம் கிராம விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க அப்பகுதியில் கடந்த கால இயற்கை அனர்த்தங்களினால்

  பாதிக்கப்பட்ட நீர்ப்பாசன மதகுகளை பார்வையிடு வதற்கான கள விஜயம் ஒன்றை இன்று  அப்பகுதிக்கு மேற்கொண்டு சேத விவரங்கள் மற்றும் பாதிப்பு அதன் முக்கியத்துவம் பற்றி அங்குள்ள விவசாயிகளிடம் கேட்டறிந்து கொண்டார் இருந்தார்

 அதனைத் தொடர்ந்து துரிதமாக இதனை புனரமைப்பதற்குரிய நடவடிக்கைகளை பிரதேசத்தின் அபிவிருத்தி குழு தலைவர் என்ற வகையில் இதற்கு பொறுப்பான பிரதேச திட்டமிடல் பணிப்பாளருக்கு இதற்குரிய நிதிகளை ஒதுக்கீடு செய்ய அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்

 மண்டூர் கமல சேவை பிரிவுக்கு கீழ் வரும் இந்த விவசாய கிராமத்தின் சுமார் 500 விவசாயிகள் 2 போகமும் 3000 ஏக்கருக்கு மேற்பட்ட வேளாண்மை செய்கையினை  மேற்கொண்டு வருவதனால்

 அவர்களுக்கான நீர்ப்பாசன தேவை முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு  இந்த நீர்ப்பாசன மதகுகளை  விரைவாக புணரமைத்து கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்

 பாராளுமன்ற உறுப்பினரின் இந்த கள விஜயத்தின் போது பிரதேச சேலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் எஸ் சுதாகரன் விவசாய- கமநல சேவை நிலையங்களில் உயர் அதிகாரிகள் விவசாயிகள் பொதுமக்கள் என பலரும் இணைந்து இருந்தனர்