கதிரவன் கலைக் கழகத்தின் சார்பில் உலகத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் முனைவர் கவிதா ஜவஹர் அவர்களுக்குப் பாராட்டு!













தமிழ்மொழி, கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்காக அரும்பணியாற்றி வரும் கதிரவன் கலைக் கழகத்தின் சார்பில், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் முனைவர் கவிதா ஜவஹர் அவர்களைப் பன்னாட்டு இணைப்பாளர் திரு. பா. குமார் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்திப் பாராட்டினார்.

இதன்போது, கதிரவன் கலைக் கழகத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவித்ததுடன், கழகத்தின் 50 ஆண்டுகால கலை, இலக்கிய, பண்பாட்டுப் பயணத்தைப் பதிவுசெய்யும் பொன்விழா சிறப்பு நூலையும் கையளித்தார். அத்துடன், கழகத்தின் சார்பிலான வாழ்த்துச் செய்தியையும் வழங்கி தனது மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

1976 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்ட கதிரவன் கலைக் கழகம், கடந்த ஐந்து தசாப்தங்களாக கலை, இலக்கியம், நாடகம், பட்டிமன்றம், சமூக விழிப்புணர்வு மற்றும் பண்பாட்டுப் பணிகள் ஊடாக ஈழத்தமிழ்ச் சமூகத்தின் கலை அடையாளத்தையும் ஆற்றலையும் வளர்த்து வருகின்றது.

ஊர் இருந்து உலகம் வரை என்ற இலட்சியப் பயணத்தில் தடம் பதித்து வரும் கதிரவன் கலைக் கழகத்தின் பொன்விழாக் காலத்தில், உலகத் தமிழ்ச் சங்கத்துடனான இத்தகைய உறவும் சந்திப்பும் ஈழத்தமிழ் மற்றும் தமிழகத் தமிழ்ச் சூழல்களுக்கு இடையிலான கலை, இலக்கிய, பண்பாட்டுத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு சிறப்பான நிகழ்வாக அமைகின்றது.கெவுளிமடு மேய்ச்சல் தரையில் பண்ணையாளர்களின் தற்காலிக கொட்டில்கள் உடைப்பு – வனவளத் திணைக்களத்தினர் மீது குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு மாவட்டம், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவுளிமடு மேய்ச்சல் தரைப் பகுதியில் மாடுகளைப் பராமரித்து வரும் சில பண்ணையாளர்கள் மீது அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாகப் பொய்யான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்றைய தினமும் பண்ணையாளர்கள் மீது வனவளத் திணைக்களத்தினரால் பொய்யான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் மீண்டும் குறித்த பகுதிக்குச் சென்ற வனவளத் திணைக்களத்தினர் மற்றும் சில சிங்களவர்கள், பண்ணையாளர்கள் தமது மாடுகளைப் பாதுகாப்பாகப் பராமரிப்பதற்காக அமைத்திருந்த தற்காலிக கொட்டில்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடைத்து அகற்றி வருவதாகப் பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவ்வாறு உடைத்து அகற்றப்படும் பொருட்கள் உழவு இயந்திரங்களில் ஏற்றிச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தமது கால்நடைகளைப் பராமரித்து வரும் பண்ணையாளர்களின் வாழ்வாதாரமும், கால்நடைகளின் பாதுகாப்பும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் உலகத் தமிழர்களின் ஒருமைப்பாட்டுக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் முனைவர் கவிதா ஜவஹர் அவர்களுக்கு கதிரவன் கலைக் கழகத்தின் இதயம் கனிந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

வாழும் தமிழ் வாழ்க!
கதிரவன் கலைக் கழகம் – மட்டக்களப்பு.