மட்டக்களப்பு மாவட்டத்தில் திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு இந்து ஆலயங்களில் நெய் விளக்கேற்றி விசேட வழிபாடுகள் முன்னெடுப்பு

 










வரதன்,

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு இந்து ஆலயங்களில் நெய் விளக்கேற்றி  விசேட வழிபாடுகள் முன்னெடுப்பு

கிழக்கு மாகாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்ததுமான மட்டக்களப்பு  திருச்செந்தூர் முருகன்   ஆலயத்தில் இன்று  அடியார்களின் அரோகரா கோசத்துக்கு மத்தியில் ஆலய பிரதம குரு சபரீஸ்வர சைதன்ய குருக்கள் தலைமையில் திருக்கார்த்திகை தீபத்திருநாள் பூசைகள் பக்தி பூர்வமாக இடம் பெற்றது

 இதனை முன்னிட்டு 
ஆலயத்தில் கலந்து கொண்ட பக்த அடியார்களால் திருக்கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு ஆலயத்தில் வெற்றிலையை கழுவி அதற்கு திருநீறு சந்தனம் குங்குமம் தடவி அதற்கு மேல் நெய்விளக்கு வைத்து அதற்கும் மங்களப் பொருட்களை தடவி தீபங்களை ஒளி ஏற்றி  முருகா முருகனுக்கு தீபாராதனை காட்டி முருக பக்த அடியார்கள் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர் 

அதன்பின் இந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளில் ஒன்றாகிய  அதிகளவிலான அடியார்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து கருவறையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு சிறப்பு திருநாளாகிய  இன்று முருகனின் திருமேனியை தொட்டு திருப்பாதத்தில் மலர்கள் தூவி  வழிபாடுகளில் ஈடுபட்டனர்

 இன்றைய திருக்கார்த்திகை தீப திருநாள்  முன்னிட்டு சகல முருகன் ஆலயங்களிலும் இன்று முருகப்பெருமானுக்கு விசேட வழிபாடுகள் இடம் பெற்று தங்களது குடும்பங்களுக்கு இறை ஆசீர்வாதம் வேண்டி பக்த அடியார்கள் விரதம் இருந்து நெய் விளக்கேற்றி வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதை காணக் கூடியதாக உள்ளது