( வி.ரி. சகாதேவராஜா)
மட்டக்களப்பு தமிழ்ச்சங்கம் வாரந்தோறும் நடத்தும் *'மட்டக்களப்பின் புலமைத்துவ ஊற்றுக்கண்கள் - பேசப்படாத பக்கங்கள்'* தொடர் 6 நிகழ்வில் சிவானந்தாவின் முன்னாள் அதிபர் கல்விமான் கைலாயபிள்ளை கணபதிப்பிள்ளை தொடர்பான கருத்தரங்கு நாளை ஞாயிற்றுக்கிழமை (22.11.2026) மாலை மட்டக்களப்பில் தமிழ்ச்சங்க தலைவர் சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு, திருமலை வீதி, 130/01 இலக்கத்தில் அமைந்துள்ள தலைவரின் காரியாலய அரங்குக் கூடத்தில் நாளை மாலை 5.00 மணி முதல் 6.30 மணி வரை இந்நிகழ்வு நடைபெறும்.
இம்முறை காரைதீவைச் சேர்ந்த, சிவானந்தா பிரபல முன்னாள் அதிபர் கல்விமான் கைலாயபிள்ளை கணபதிப்பிள்ளை அவர்களின் புலமைத்துவம் மற்றும் வாழ்வு குறித்து விரிவாகப் பேசப்படவுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக புலவியல் துறை தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இ. கிருபைராஜா சிறப்பு உரையாற்றவுள்ளார்.
நிகழ்வின் இறுதியில் மட்டக்களப்பு தமிழ்ச்சங்க பொதுச் செயலாளர் சட்டத்தரணி மு.கணேசராசா நன்றியுரை வழங்கவுள்ளார்.
மட்டக்களப்பில் மறைந்து போன, பேசப்படாத புலமையாளர்களின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த வாராந்த நிகழ்வுத் தொடர் பிரதி ஞாயிறு நடத்தப்பட்டு வருகிறது.
வருகையை உறுதிப்படுத்த விரும்புவோர் *0777589711, 0777142189* ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.





