மட்டக்களப்பு பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில், பேத்தாழை பாரதியார் முன்பள்ளி மாணவர்களுக்குப் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன.
முன்பள்ளி ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, ஆலயத் தலைவர் திரு. கி. கெங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
பேத்தாழை பாரதியார் முன்பள்ளியின் 44 ஆவது கலைவிழாவைச் சிறப்பிக்கும் வகையில், இன்றைய தினம் ஆலயத்தில் வைத்து சிறார்களுக்கான புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன.
சிறார்களின் கல்வி வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இச்செயற்பாடு, ஆலய நிர்வாகத்தின் சமூக அக்கறையையும் கல்வி மீதான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் எதிர்கால முன்னேற்றத்திற்கும் என்றும் உறுதுணையாகச் செயற்படுவோம் என பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.






