இந்தியாவின் பீகார் மாநிலத்தில் 78 வயது மூதாட்டி ஒருவரை 18 வயது இளைஞன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
ஆரம்பத்தில் இந்தத் திருமணத்தின் பின்னணி குறித்து பலரும் ஆச்சரியமடைந்த நிலையில், மூதாட்டியிடம் பெருமளவிலான சொத்துக்கள் இருந்தும் வயோதிப காலத்தில் அவரைப் பராமரிக்க எவரும் இல்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, மூதாட்டியின் இறுதிக்காலம் வரை அவரைப் பராமரிக்கும் பொறுப்பை இளைஞன் ஏற்றுக்கொள்வதற்கும், அவரின் மறைவுக்குப் பின்னர் சொத்துக்கள் அனைத்தும் இளைஞனுக்குச் சொந்தமாகும் வகையிலும் இரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த உடன்படிக்கை இருவரின் சம்மதத்துடனும், இளைஞனின் பெற்றோருக்குத் தெரிந்தும் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதரவற்ற மூதாட்டிக்குப் பராமரிப்பும், இளைஞனுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பும் கிடைக்கும் வகையில் இந்தத் திருமணம் அமைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதன் பின்னணி தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.





