( வி.ரி.சகாதேவராஜா)
உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மகராஜ் தலைமையிலான குழுவினர் இன்று (19) வியாழக்கிழமை கதிர்காமம் மற்றும் செல்லக் கதிர்காமம் ஆகிய தலங்களுக்கு விஜயம் செய்தனர்.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் குருகுல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் ஏற்பாட்டில் இக் குழுவினர் விஜயத்தை மேற்கொண்டனர்.
உலகளாவிய சுவாமி சுஹாதானந்தா ஜீ இற்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசினால்
சுவீகரிக்கப்பட்ட கதிர்காமம் இகிமி.மடத்தையும் பார்வையிட்டார்.
குறித்த கதிர்காமம் இ.கி.மடம் 1953 யூலை 12 இல் அன்றைய பிரதமர் டட்லி சேனநாயக்காவால் திறந்து வைக்கப்பட்டது.
1852. ஜுன் மாதம் 08 ஆம் திகதி இராமகிருஷ்ண மிஷன் மடம் கதிர்காமத்தில் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போதைய கதிர்காம பஸ்நாயக்க நிலமே ஜெ.ஏ.றம்புக்பொட அடிக்கல் நட்டார். அவரே அந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
ஒருவருட காலத்தில் விசாலமான கட்டிடங்கள் கட்டப்பட்டன.
அத்தகைய ராமகிருஷ்ண மிஷன் மடம் 1953 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த மாண்புமிகு டட்லி சேனாநாயக்க அவர்களால் அன்றைய இலங்கை இராமகிருஷ்ண மிஷன் நாயகம் சுவாமி மாதவானந்தா ஜீ முன்னிலையில் முறையாகத் திறந்து வைக்கப்பட்டது.
அப்போதிருந்து, மத வேறுபாடின்றி யாத்ரீகர்களுக்கு அன்னதானம் இலவச உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்பட்டது.
அவ்வாறு உன்னத மனிதாபிமான ஜீவ சேவைகளைத் தொடர்ந்த அந்த மடம் 1976 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
![]()










