கண்டி – மஹியங்கனை பிரதான வீதியில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 22 பேரின் நிலை என்ன?

 


கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் ஹசலக, பாலம் சந்தி பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களில் 12 பெண்களும் 10 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.