பாகிஸ்தானின் திரவப் பெற்றோலிய வாயுவை ஏற்றிச் சென்ற பவுசர் வாகனத்துடன் பேருந்து மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

 


 பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் திரவப் பெற்றோலிய வாயுவை ஏற்றிச் சென்ற பவுசர் வாகனத்துடன் பேருந்து மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலூசிஸ்தான் மாகாணத்தின் மக்ரான் கரையோர நெடுஞ்சாலையில் நேற்று (19) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி முஹம்மத் அஸ்லம் பங்குல்சாய் தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.