வரதன்.
எவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட்டாலும் முப்படையினரின் உதவியுடன் மக்களை பாதுகாக்க வேண்டிய முற் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன- பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்களின் முன்னாயத்த திட்டங்களின் ஏற்பாட்டில் அரசாங்கத்தினால் ஏவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட்டாலும் பொது மக்களை அதிலிருந்து பாதுகாக்க வேண்டிய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் எடுக்கப்பட்டுள்ளதுடன்
பொதுமக்கள் அரசாங்கத்தினால் விடுக்கப்படும் அனர்த்த முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து நடக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன்
பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்வதுடன் அனர்த்த சூழ்நிலைக்கு வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இடி மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறும்
மாவட்ட அரசாங்க அதிபரின் ஊடாக வேண்டிய முன்னாயத்த பணிகள் தற்போது அரச திணைக்கள தலைவர்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எனவே பொதுமக்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என
மட்டு நகரில் இன்று தாழ்நிலப்பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகளில் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்ட பின்னர் மாவட்டத்தில்
மேற்கொள்ளப்பட்டுள்ள அனர்த்த முன்னாயத்தை ஏற்பாடு சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு இவ்வாறு கருத்து தெரிவித்தார்






