மட்டக்களப்பில் பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி.








வரதன்,
 

பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் உயர் அதிகாரிகளுக்கான இணையவழி முகாமைத்துவ தகவல் முறைமையில் தரவுகளைப் பதிவு செய்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் பழைய மாட்ட செயலகத்தில் இன்று (21) இடம் பெற்றது.

கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு அமைச்சின் பிரதி பணிப்பாளர் எச்.எம்.எம். ரூவைத் மற்றும் உதவி பணிப்பாளர் யோகநாதன் ஆகியோரின் பங்கேற்புடன் இடம் பெற்றது.

கிராமிய வறுமையை ஒழித்து சமூகங்களின் பொருளாதார மற்றும் சமூக வலுவூட்டலை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தினை வலுப்படுத்தும் முகமாக  இப்பயிற்சி நடை பெற்றது.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் சமூக அபிவிருத்திச் சபைகள் ஊடாக அடையாளம் காணப்படும் மக்களின் தேவைகள் மற்றும் கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்களை  இணையவழித் தகவல் முறைமையில் பதிவுசெய்வதற்கும் அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவதுவதற்குமான  பயிற்சிகளை ஜனாதிபதி செயலகத்தின் சிரேஸ்ட உதவி செயலாளர் சரதாஞ்சளி மனோகரன் அவர்கள் தரவு கட்டமைப்பு தொடர்பாக வளவான்மையை மேற்கொண்டார்.

மேலும் தகவல்களைத் துல்லியமாகப் பதிவுசெய்தல், அபிவிருத்தித் திட்டங்களைத் திட்டமிடுதல் மற்றும் அவற்றின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல் ஆகியவற்றின் ஊடாக மக்களின் பங்கேற்புடன் வினைத்திறனான கிராமிய அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு இத்தகைய பயிற்சிகள் பங்களிப்புச் செய்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக கிராமிய வறுமையைக் குறைத்து, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய ரீதியில் சனாதிபதி செயலகத்தினால் பிரஜா சக்தி வேலைத் திட்டத்தின்  கீழ்    மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அதிகளவான  திட்டங்கள் ஒதுக்கப்பட்டதுடன் அதிகளவான திட்டங்கள்  மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டமையை முன்னிட்டு பாராட்டு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.