உலக மனநல தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு வீதி நாடகம்!












-கேதீஸ்-

உலக மனநல தினத்தை முன்னிட்டு, உளவியல் ஆலோசனை மய்யம் (PAC) ஏற்பாட்டில் மனநலம் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான வீதி நாடகம் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்றது.

மனநலத்தின் முக்கியத்துவம், போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சமூக ஊடகங்களின் பொறுப்பான பயன்பாடு உள்ளிட்ட சமூகத்திற்கு அவசியமான விடயங்களை மையப்படுத்தி இவ்விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

பொதுமக்கள் மத்தியில் மனநலம் தொடர்பான புரிதலை அதிகரிப்பதுடன், சமூகப் பிரச்சினைகள் குறித்து ஆக்கபூர்வமான சிந்தனைகளை ஏற்படுத்தும் நோக்கில் கிழக்குப்பல்கலைக்கழக விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவக மாணவ, மாணவிகளின்  பங்களிப்புடன் வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது.

இதன்போது பொதுமக்களுக்கு மனநலம் தொடர்பான விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

மனநல விழிப்புணர்வை சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் தொடர்ச்சியான செயற்பாடுகளை முன்னெடுப்பதே தமது நோக்கமாகும் என உளவியல் ஆலோசனை மய்யம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் PAC உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.