மட்டக்களப்பு ஹெரிடேஜ் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் முருக்கன்தீவு சிவசக்தி வித்தியாலய மாணவர்களுக்கான உலக சிறுவர் தின விழா இன்று மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
மகிழ்ச்சியும் படைப்பாற்றலும் சமூக ஒருமைப்பாடும் நிறைந்த இந்த நிகழ்வில், மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நாடகங்கள் மற்றும் உரைகளை நிகழ்த்தினர். அத்துடன் ஆசிரியர்களின் நடனம் மற்றும் பாடல் கலைநிகழ்ச்சிகள் நிகழ்விற்கு மேலும் வர்ணமும் உற்சாகமும் சேர்த்தன. மாணவர்களின் கல்வி மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை இந்நிகழ்வுகள் வெளிப்படுத்தின.
சிறுவர்களை மகிழ்வித்து அவர்களைக் கௌரவிக்கும் வகையில், ரோட்டரி கழகத்தின் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகளும் சிற்றுண்டிகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் சிறப்பம்சமாக குறித்த பாடசாலையில் முதன்முறையாக 5ம் தர புலைமைப்பரில் பரீட்சையில் ஒரு மானவி சித்திபெற்றுள்ளார் அவரை மட்டக்களப்பு ஹெரிடேஜ் ரோட்டரி கழகத்தினர், பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ரோட்டரி கழக உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)





