சர்வதேச சிவப்பு எச்சரிக்கையால் அமெரிக்காவில் முடங்கிய பேசில் ராஜபக்ஷ” வேறு எந்த நாட்டிற்கும் தப்பியோட முடியாத இக்கட்டான நிலை!

 

 


நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட சர்வதேச சிவப்பு எச்சரிக்கை (Interpol Red Notice) காரணமாக, அமெரிக்காவில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் பேசில் ராஜபக்ஷ வேறு எந்த நாட்டிற்கும் பயணிக்க முடியாதவாறு அங்கு முடங்கியுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பேசில் ராஜபக்ஷவை விரைவாகக் கைதுசெய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, சர்வதேச பொலிஸாரின் (Interpol) உதவியுடன் இலங்கை காவல்துறையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் (CID) தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், அவரை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் அமெரிக்க நீதிமன்றத்திற்கும் முறையான தகவல்கள் வழங்கப்படவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.