உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்திய உலக நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பல்வேறு ஆக்கபூர்வமான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, 2026 ஒக்டோபர் 5ஆம் திகதி மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் விசேட கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
சுகாதாரத் தகவல்களை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களிடம் சிறப்பாக கொண்டு சேர்த்தமைக்காகவும், முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மற்றும் சுகாதார தகவல் மையங்கள் ஊடாக மக்களுக்கு பயனுள்ள சுகாதாரத் தகவல்களை சிறப்பாக வழங்கியமைக்காகவும், மட்டக்களப்பு பிராந்திய வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் விசேட சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இந்நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பணிப்பாளர், இவ்வாறான ஊக்குவிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள் சுகாதாரத் தகவல்களை மேலும் சிறப்பாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு உந்துசக்தியாக அமையும் எனத் தெரிவித்தார்.
மேலும், சுகாதாரம் தொடர்பான தகவல்கள் இலகுவான முறையில் மக்களிடம் சென்றடைவதன் மூலம், பொதுமக்கள் தமக்குக் கிடைக்கக்கூடிய சுகாதார சேவைகள் தொடர்பில் முன்கூட்டியே அறிந்து கொண்டு, நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தரம் மற்றும் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் J. சகாயதர்ஷினி ஒருங்கிணைத்து சிறப்பாக நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மக்களின் சுகாதார அறிவை மேம்படுத்துவதுடன், பாதுகாப்பான சுகாதார சேவையை உறுதி செய்வதற்கான முக்கியத்துவத்தையும் இந்நிகழ்வு எடுத்துக்காட்டியது.


.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)






