மட்டக்களப்பு பிரதேசமொன்றில் வீட்டில் தனிமையில் இருந்த 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு செய்ய முயன்றதாகக் கூறப்படும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் 51 வயதுடைய கணக்கெடுப்பு உத்தியோகத்தர் ஒருவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 4ஆம் திகதி குறித்த வீட்டின் குடிநீர் பாவனை அளவை கணக்கிடுவதற்காக (மீற்றர் கணக்கெடுப்பு) குறித்த உத்தியோகத்தர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, வீட்டில் 12 வயது சிறுவன் தனிமையில் இருந்த நிலையில், அவருக்கு பாலியல் தொந்தரவு செய்ய முயற்சித்ததாக சிறுவனின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த உத்தியோகத்தரை கடந்த 5ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர் நேற்று (06) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





