ஆரையம்பதியில் உணவகங்களில் பரிசோதனை – 10 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

 








































ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் உணவு கையாளும் நிறுவனங்களைப் பரிசோதிக்கும் நடவடிக்கையானது 10/10/2026 அன்று முன்னெடுக்கப்பட்டது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. R. முரளீஸ்வரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி DR. சிவலக்‌ஷன் தலைமையில் பொதுச்சுகாதார  பரிசோதகர்களினால்  இப்பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, மொத்தம் 13 உணவுக் கையாளும் நிறுவனங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன், அவற்றில் 10 நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கும், உணவுக் கையாளும் நிறுவனங்கள் உரிய சுகாதார நடைமுறைகளையும் சட்ட விதிமுறைகளையும் பின்பற்றுவதை உறுதிசெய்வதற்கும் இத்தகைய பரிசோதனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், உணவுப் பாதுகாப்புர தொடர்பான கண்காணிப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.என்று ஆரையம்பதி  சுகாதார வைத்திய அதிகாரி அவர்கள் தெரிவித்தார்.