Facebook Reels போட்டி – மட்டக்களப்பு இளைஞர்களுக்கு தெளிவூட்டல்!

 

 


“சொந்தமாக இருக்க இடம், அழகான ஒரு வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலக மட்டத்தில் Facebook Reels போட்டியை நடத்துவதற்கு அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயத்தின் அறிவுருத்தளுக்கு அமைவாக மட்டக்களப்பில் இளைஞர் சேவைகள் மன்றத்தில் மாவட்ட தகவல் அதிகாரி வி.ஜிவானந்தன் மற்றும் இளைஞர் சேவைகள் மன்ற உதவி பணிப்பாளர் திருமதி நிசாந்தினி அருன்மொழி பங்கு பற்றுதலுடன் இளைஞர்களுக்கான தெரிவூட்டல்கள் வழங்கப்பட்டது.

அரசாங்கத்தின் புதிய வீட்டுத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள 357 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 357 பிரதேச இளம் ஊடகவியலாளர்களை இணைத்து பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுப்பதற்கு இளைஞர் சேவைமன்றத்துடன் இணைந்து மாவட்ட ஊடகப்பிரிவு மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபை
செயற்படவுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, இளைஞர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பயனுள்ள தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் Facebook Reels தயாரித்து வெளியிடுவதற்கான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது

மேலும், தயாரிக்கப்படும் Reels-களின் பார்வைகள், விருப்பங்கள், கருத்துகள் மற்றும் பகிர்வுகள் உள்ளிட்ட சமூக ஊடகப் பெறுபேறுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்து பரிசுகள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இக் கலந்துரையாடலின் போது தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.