கிழக்கு மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் முதலாம் ஆண்டு நிறைவு – செங்கலடியில் கோலாகலமாக நடைபெற்ற ஐயப்ப மாநாடு!

 


கிழக்கு மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் முதலாவது வருட நிறைவை முன்னிட்டு, மாபெரும் ஐயப்ப மாநாடும் சர்வமத சங்கமமும் கடந்த 19.09.2026 அன்று செங்கலடி வசந் ஹோட்டல் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
​இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
​விழாவின் போது அதிதிகள் வரவேற்பு, மங்கல விளக்கேற்றல் மற்றும் ஆன்மீக ஆசியுரைகளுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. தொடர்ந்து கலை நிகழ்வுகளும், அதிதிகள் உரைகளும் இடம்பெற்றன.
​நிகழ்வின் சிறப்பம்சமாக, ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளில் சாதனை படைத்த மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் பயன்பாட்டிற்காகத் துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
​இந் நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் சர்வதேச இந்துமத குருபீட பீடாதிபதி ஸ்ரீ ஐயப்பதாஸக் குருக்கள், மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், ஆசிரியர்கள், கிழக்கு மாகாண ஐயப்ப ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.