தேசிய மட்ட வூஷு போட்டியில் மட்டக்களப்பு வீரர் ஜெ. கிருஷ்ணா வெண்கலப் பதக்கம்!!!

 









2026ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட வூஷு போட்டியில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கு பற்றிய ஜெயச்சந்திரன் கிருஷ்ணா வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் 26, 27 மற்றும் ஆம் திகதிகளில் நடைபெற்ற தேசிய மட்ட வூஷு போட்டியில், 56 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கிய அவர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார். இதன் மூலம், தனது நான்காவது தடவையாக கிழக்கு மாகாணத்திற்கு தேசிய மட்டப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளார். அவரது தொடர்ச்சியான விடாமுயற்சி, கடினமான பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பே இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மேலும், அவரது பயிற்சி மற்றும் போட்டிப் பயணத்திற்கு வழிகாட்டியாகவும், ஊக்கமளிப்பவராகவும் செயற்பட்ட விளையாட்டு உத்தியோகத்தர் A.சிவகுமார் அவர்களுக்கும் இந்த வெற்றியில் முக்கிய பங்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.