நேபாள அரசாங்கத்திற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  

 


நேபாள அரசாங்கத்திற்கு மனிதாபிமான உதவியாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை (1 Million USD) அன்பளிப்பாக வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் இயற்கை அசம்பாவிதங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு, இலங்கை அரசாங்கத்தினால் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் மனிதாபிமான அடிப்படையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது