எம்.பி. வைத்தி‌யர் இ.சிறிநாத்தின் நிதி ஒதுக்கீட்டில் விசேட தேவையுடையோருக்கு சுயதொழில் உபகரணங்கள் கையளிப்பு!

 


கோறளைப்பற்று தெற்கு, கோரகல்லிமடு பகுதியில் இயங்கி வரும் "புதிய பாதை விசேட தேவையுடையோர் அமைப்பு" நிர்வாகிகளின் கோரிக்கைக்கு அமைவாக, அவர்களின் வாழ்வாதார சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் பொருட்டு நெல் மற்றும் மா அரைக்கும் சிறிய அளவிலான ஆலை இயந்திர உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்ட இவ்வியந்திர உபகரணங்களை,  கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது, பாராளுமன்ற உறுப்பினர் அமைப்பின் நிர்வாகிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

இந்நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.பிரபாகரன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் புதிய பாதை விசேட தேவையுடையோர் அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.