மட்டக்களப்பு மண்ணின் வீர மைந்தனான கே. ஜிஜானந்த், கொழும்பில் நேற்று நடைபெற்ற தேசிய ரீதியிலான கட்டழகர் (Bodybuilding) போட்டியில் 75 கிலோ எடைப் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
தேசிய மட்டத்தில் நடைபெற்ற இப்போட்டியில் திறமையை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ள ஜிஜானந்த், இதன் மூலம் கிழக்கு மாகாணத்திற்கும் மட்டக்களப்பு நகருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் கட்டழகர் போட்டியில் சாதனை படைத்ததுடன், சிறந்த மல்யுத்த வீரராகவும் விளங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் கே. ஜிஜானந்துக்கு மேலும் பல வெற்றிகளையும் சாதனைகளையும் குவிக்க வேண்டும் என மட்டக்களப்பு மக்கள் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.








