திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் தொடரின் இரண்டாவது நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களை இலக்காகக் கொண்டு இன்று (29) மட்டக்களப்பில் உள்ள ‘East Lagoon’ ஹோட்டலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
Coalition for Inclusive Impact (CII) நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந் நிகழ்வு, இளைஞர் பிரதிநிதிகளின் நேரடிப் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்ற எண்ணக்கருவை மேலும் ஊக்குவிக்கும் முதன்மை நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறைகள் மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பான தெளிவான விழிப்புணர்வை வழங்குதல், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, மக்கள் பிரதிநிதித்துவத்தை மேலும் உறுதியாக்குதல் போன்ற விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
இந் நிகழ்வில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியப் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், CII நிறுவனத்தின் பிரதிநிதிகள், துறைசார் வளவாளர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்திரளான இளைஞர், யுவதிகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.


.jpeg)


.jpeg)

.jpeg)


.jpeg)




