Pasikuda 2026 – Where The Sea Celebrates” — பாசிகுடாவில் கோலாகலமாக அரங்கேறிய பிரம்மாண்ட கடற்கரை விழா.

 

 





 










இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் (Sri Lanka Tourism Promotion Bureau) ஏற்பாட்டில், "Pasikuda 2026 - Where The Sea Celebrates" எனும் பிரம்மாண்ட கடற்கரை விழா இன்று (29 ஆகஸ்ட் 2026, சனிக்கிழமை) மாலை பாசிகுடா பொதுக் கடற்கரையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தார்.

இதன்போது இலங்கையின் தொன்மை மற்றும் கலாச்சாரப் பெருமையை வெளிப்படுத்தும் வண்ணமயமான நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் 
​கடலோரப் பகுதியின் பாரம்பரிய மற்றும் சுவையான உள்ளூர் உணவு வகைகளைச் சுவைப்பதற்கான சிறப்பு விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும் சுற்றுலா துறையின் ஊக்கப்படுத்தலுக்காக இங்கு வருகை தரும் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையின் துள்ளலான நேரலை இசை விருந்தும் ​பிரம்மாண்ட வாணவேடிக்கை (Fireworks) காட்சிகளும் பார்ப்போரை கவரும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தமை விசேட அம்சமாகும்