மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நீண்டகாலப் போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றும் நோக்கில், ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி திட்டத்தின் (I-Road) கீழ் கள ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ கந்தசாமி பிரபு அவர்கள், வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பாவகொடிச்சேனை வீதியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதன்போது, குறித்த வீதி அபிவிருத்திப் பணிகளைத் தாமதமின்றி விரைவாக நிறைவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்.





