அகில இலங்கை ரீதியில் இரட்டை முதலிடம் – சிவானந்தா பாடசாலை மாணவன் அகிலேஷ் சாதனை!

 


இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது – 2024 போட்டியில், இராமகிருஷ்ண மிஷன் அறநெறிப் பாடசாலை சார்பில் பங்கேற்ற       சிவானந்தா பாடசாலை மாணவன்     சிவாநந்தியன் P. அகிலேஷ், அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற பேச்சுப் போட்டி மற்றும் நாடகப் போட்டி ஆகிய இரண்டிலும் முதலிடத்தைப் பெற்று இரட்டை சாதனை படைத்துள்ளார். 

தனது திறமை, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம் எமது பாடசாலைக்கும், இராமகிருஷ்ண மிஷன் அறநெறிப் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ள மாணவன் சிவாநந்தியன் P. அகிலேஷ் அவர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்களையும், உளமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.