நாட்டைச்
சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பலத்த
காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம்
சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த
எச்சரிக்கை அறிவிப்பு, இன்று (10) காலை 07.00 மணி முதல் நாளை (11) காலை
07.00 மணி வரை அடுத்த 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாத்தறையிலிருந்து
பொத்துவில் வரை அம்பாந்தோட்டை வழியாக உள்ள கடலோரப் பகுதிகளில் காற்றின்
வேகம் சில நேரங்களில் மணிக்கு 60 கிலோமீட்டரைத் தாண்டக்கூடும்.
மேலும்
கடற்பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம். எனவே,
மறு அறிவிப்பு வரும் வரை இந்தக் கடல் பகுதிகளுக்குக் கப்பல் பயணம் செய்ய
வேண்டாம் என்று கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்குத்
அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடல் பகுதிகளில் இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
அதே
நேரத்தில், அந்தக் கடல் பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக
மாறவும் வாய்ப்புள்ளது. இக்காரணத்தால், கடற்றொழில் மற்றும் கடற்படை
சமூகத்தினர் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால
அறிவிப்புகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு்ள்ளனர்.





