மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதான வீதியில் முச்சக்கர வண்டி மின் கம்பத்துடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் ஆபத்தான நிலையில் இருவர் படுகாயம் !

 

 

 









மட்டக்களப்பு  கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  ஆரையம்பதி பிரதேசத்தில் முச்சக்கர வண்டி மின் கம்பத்தில் மோதியதில்
முற்றாக சேதமடைந்துள்ளது.

தாய், தந்தை,  மகள், ஆகிய மூவரும் சாய்ந்த மருதில்  இருந்து ஏறாவூர் நோக்கி திருமண வைபவம் ஒன்றிக்காக முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கையில் சாரதியின் நித்திரை தூக்கம் காரணமாக  வேக கட்டுப்பாட்டினை இழந்து மின்கம்பத்தில் மோதி  28 .08. 2026 இன்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக காத்தான்குடி பொலீசார் தெரிவித்தனர்

  மேலும் (50) வயதான தாய் ஆபத்தான நிலையிலும் படுகாயமடைந்த நிலையில் (55) வயதுடைய தந்தையும், (15) வயதுடைய  மகள்  காயங்களுக்குள்ளான நிலையில் உடனடியாக ஆரையம்பதி  பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு,  பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து   பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்