மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் "அத்தம" தேசிய வேலைத்திட்டம்.






















































ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்ட அத்தம வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக 
"ஒற்றுமையாக ஒன்றிணைவோம்  தூய்மையான இலங்கையைக் கட்டியெழுப்புவோம்!"  எனும் தொனிப்பொருளுடனான நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கிராம சேவகர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர், பாதுகாப்பு படையின் தலைமை அதிகாரி, பிரதேச செயலக உத்தியோகத்தர், பிரஜா சக்தி உறுப்பினர்கள், பொதுமக்கள் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ் வேலைத்திட்டமானது மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் 27 கிராம சேவகர் பிரிவுகளிலும் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் மண்முனைப்பற்றுக்கான விசேட வேலைத்திட்டமாக ஆரையம்பதி  தெற்கு ஜோதி ஒழுங்கை வடிகான் துப்பரவு மற்றும் பொது சந்தை கட்டடதொகுதி நீர் வழிந்தோடும் கால்வாய் ஆகியவை துப்பரவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.