மட்டக்களப்பு, ஆயித்தியமலையைச் சேர்ந்த 14 வயதுடைய அல்போன்ஸ் ஜெசிக்கா என்ற சிறுமி, தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்ற நிலையில் கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
வழக்கம்போல் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய சிறுமி, அன்று பிற்பகல் 2.00 மணிக்குத் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்றுள்ளார். எனினும், மாலை 6.00 மணி கடந்தும் அவர் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், உடனடியாகக் காவல்துறையின் ‘119’ அவசர உதவி இலக்கத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மறுநாள் ஆயித்தியமலை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக மட்டக்களப்பில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.





