மட்டக்களப்பு மயிலம்பாவெளி பிரதேசத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 88.8 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.

 


மட்டக்களப்பு மயிலம்பாவெளி பிரதேசத்தில் இன்று (03) திகதி காலை 8.30 முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 88.8 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடா பிராந்தியத்தின் வளிமண்டலத்தில் உருவாகி இருக்கின்ற காற்று சுழற்சி நிலை காரணமாக மட்டக்களப்பில் மழையுடன் கூடிய காலநிலை காணப்படுகின்றது.

இதேவேளை மழைவீழ்ச்சியை அளவிடும் பிரதேசங்களான மட்டக்களப்பில் 47.8 மில்லி மீற்றர், உறுகாமத்தில் 71.0 மில்லி மீற்றர், நவகிரி பிரதேசத்தில் 62.0 மில்லி மீற்றர், உன்னிச்சையில் 50.8 மில்லி மீற்றர், தும்பங்கேணியில் 40.0 மில்லி மீற்றர், பாசிக்குடாவில் 14.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், இதுதவிர குறைந்த மழைவீழ்ச்சியாக கட்டு முறிவு பிரதேசத்தில் 3.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரியில் 7.2 மில்லி மீற்றர், மழை விழ்சியும் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி ஊடகப்பிரிவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்