கென்யாவின் நைரோபியில் நடைபெற்ற உலகப் பள்ளி விவாத சாம்பியன்ஷிப் (WSDC 2026) போட்டியில், இலங்கை தேசிய பள்ளி விவாத அணி வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியுள்ளது. 80-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 700-க்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்ற இப்போட்டியின் ஆரம்பச் சுற்றுகளில் (Preliminary Rounds), இலங்கை அணி 8 சுற்றுகளில் 7 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் உலக அளவில் முதலிடத்தைப் பிடித்து புதிய வரலாறு படைத்தது.
இத்துடன், தனிநபர் சாதனையாக எலிசபெத் மொயர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் சவித் விஜேசுந்தர உலகளவில் 4வது சிறந்த விவாதிப்பாளராகவும், ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கொண்டவர்கள் (ESL) பிரிவில் முதலிடத்தையும் பிடித்து நாட்டின் முதன்மை விவாதிப்பாளராகப் பதிவானார்.
ராயல் கல்லூரியின் ஆடம் தில்ஷன், டி. தரணிஹரன், கொழும்பு சர்வதேச பாடசாலையின் ருதேஷ் ராம் மற்றும் ஹில்வுட் கல்லூரியின் அபூர்வா ஜினதாச ஆகியோர் அடங்கிய இலங்கை அணி, சர்வதேச அரங்கில் நாட்டின் கல்வித் திறனை நிலைநிறுத்தி பெருமை சேர்த்துள்ளது.





